Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் எஃப்டி வட்டி உயர்வு - எவ்வளவு தெரியுமா?

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் எஃப்டி வட்டி உயர்வு - எவ்வளவு தெரியுமா?

12 மாத வைப்புகளுக்கான வட்டி 6.85%-லிருந்து 7% ஆகவும், 15 மாத டிஜிட்டல் வைப்புகளுக்கான வட்டி 7.1%-லிருந்து 7.5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 24–35 மாத வைப்புகளுக்கும் 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம், தனது நிலையான வைப்பு நிதித் (FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி, 36 முதல் 60 மாதங்கள் வரையிலான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 7.85% வட்டி வழங்கப்படுகிறது.

12 மாத வைப்புகளுக்கான வட்டி 6.85%-லிருந்து 7% ஆகவும், 15 மாத டிஜிட்டல் வைப்புகளுக்கான வட்டி 7.1%-லிருந்து 7.5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 24–35 மாத வைப்புகளுக்கும் 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50%, பெண்களுக்கு 0.05% வட்டி வழங்கப்படும். முதிர்வடைந்த வைப்புகளைப் (Matured Deposits) புதுப்பிப்பவர்களுக்கு கூடுதலாக 0.15% வட்டி கிடைக்கும்.

முதலீட்டாளர்கள் வைப்புத் திட்ட விதிமுறைகள், முன்கூட்டிய பணமெடுப்பு நிபந்தனைகள் மற்றும் வரி விளைவுகளைப் பரிசீலித்து முதலீடு செய்ய வேண்டும்.


முந்தைய செய்தி
தொழிற்சாலையில் மறுசுழற்சியை ஊக்குவிக்க வழிகாட்டும் சிஐஐ
அடுத்த செய்தி
மூன்றாம் காலாண்டில் ரூ.86,500 கோடி: ஐபிஓ நிதி திரட்டலில் இந்தியா சாதனை

தொடர்புடைய செய்திகள்